ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் QR முறைமையூடாக ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
"ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம்.
இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் போது, வாகனங்களை கைமாற்றிய பலர் இருந்தனர். அவர்களால் பதிவு செய்ய முடியாமல் போனது.
ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த QR முறைமையை அறிமுகப்படுத்தினோம். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் BRN (வணிகப் பதிவு இலக்கம்) எனும் தனிப்பிரிவு உள்ளது.
நாட்டின் நெருக்கடியான நிலையில், ஒரு தனிநபர் இரண்டு மூன்று வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்" என குறிப்பிட்டார்.







No comments