Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்


சமூக வலைத்தளங்கள் ஊடாக "காஸ் குக்கர்" விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

நவீன ரக காஸ் குக்கர் விற்பனைக்கு உள்ளதாக முகநூல் விளம்பரத்தை நம்பி அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். 

அவர்கள் தமது வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பிலிடுமாறும் , மேலதிக தகவல்களுக்கு வட்ஸ் அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறி இலக்கத்தை வழங்கியுள்ளனர். 

அதன் அடிப்படையில், காஸ் குக்கரின் விலையான 32 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டு ,அதனை வாட்ஸ்அப் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார். 

அதன் பின்னர் காஸ் குக்கரை அனுப்பி வைப்பதாக இரண்டு மூன்று தினங்கள் ஏமாற்றி , தாம் அனுப்பி வைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அதனை அனுப்பி வைத்தமைக்காக ஆதாரத்தை கேட்ட போது , அவர்கள் வட்ஸ் அப் இலக்கத்தை அழித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களின் முகநூல் கணக்கில் காணப்பட்ட முகப்பு படம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அந்த படம் , புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்த தம்பதியினரின் படம் என தெரிய வந்துள்ளது. 

அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் தெரிந்து , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


No comments