Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடும் வறட்சியால் கருகும் தேயிலைச் செடிகள்


இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீடிக்கும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிறிய மற்றும் தனியார் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் மழைப்பொழிவு இன்மை காரணமாக, தேயிலைச் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன.

இதனால் செடிகளின் வளர்ச்சி முற்றாகக் குறைவடைந்துள்ளதுடன், புதிய தேயிலைக் கொழுந்துகள் துளிர்ப்பதும் நின்றுபோயுள்ளன.

வழமையாகப் பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்தின் அளவு தற்போது பாதியாகக் குறைந்துள்ளதாகத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் போதிய வருமானம் இன்றித் தொழிலாளர்களுக்குச் ஊதியம் வழங்குவதிலும், தோட்டங்களைப் பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேநிலை நீடித்தால், தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

போதிய கொழுந்து விநியோகம் இல்லாத பட்சத்தில், இப்பகுதியிலுள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமது வாழ்வாதாரத்தைக் காக்க, பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments