சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.46மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று தொடர்ந்து 45நாட்கள் மண்டலாபிஷேக பெருவிழாவும் இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட கிரியாரம்ப நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 5மணி முதல் இடம்பெறும். 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மேற்படி கும்பாபிஷேக பெருவிழா சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்,சிவஸ்ரீ செ.பரமானந்தக்குருக்கள் ஆகியோரின் நல்லாசியுடன் சிவஸ்ரீ சி.சோதிரத்தினக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஆலய போஷகர் வை.சிவராசா அவர்களினால் திருப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு கும்பாபிஷேக பெருவிழா முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments