Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கட்டிலுக்கு அடியில் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்த பெண் கைது


வீடொன்றில் கட்டிலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 லீட்டர் பெட்ரோலுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

கல்முனை பகுதியில் வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

அதன் போது வீட்டினுள் கட்டிலுக்கு கீழ் போத்தல்கள் மற்றும் கலன்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 32 லீட்டர் பெட்ரோலை பொலிஸார் மீட்டனர். 

அதனை அடுத்து வீட்டின் உரிமையாளரான பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments