வர்த்தகத் தொழிற்துறை மன்றம் யாழ்ப்பாணம் (CCIY) மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA) இணைந்து நடாத்தும் வடமாகாண தொழில் முனைவோர் விருதுகள் 2025 விருது வழங்கும் விழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தின் தொழில் முனைவோர்களின் முயற்சிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்புகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் , வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் , இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி , தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தின் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

















No comments