Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமராட்சியில் மாமியாரை படுகொலை செய்த தனது மகனுக்கு உதவிய தந்தையும் கைது


மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை தனது மனைவியின் தாயாரை வெட்டி படுகொலை செய்ததுடன் , மனைவியின் தந்தையை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி கடும் காயங்களை விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் படுகொலை செய்ய மற்றும் கடும் காயங்களை விளைவிக்க பயன்படுத்திய வாளினை மறைத்து வைக்க உதவிய குற்றச்சாட்டில் அந்நபரின் தந்தையாரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

No comments