மத்திய கிழக்கு போர், அதனால் நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றாலையே எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE) 2026 வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு பொருளாதாரமும் அதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முன்னேறுகிறது என்றும், வர்த்தகர்கள், நிதித் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்கள் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்
ஏனெனில் அவநம்பிக்கை பொருளாதாரங்களை அழிக்கிறது கடந்த 2025 ஆம் ஆண்டில் அனைத்து பொருளாதார குறிகாட்டிகளும் இலங்கைப் பொருளாதாரம் எவ்வாறு சீராகவும் நம்பகத்தன்மையுடனும் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதைக் காட்டுகின்றன
நிலையானதும் வெளிப்புற மற்றும் உள் அதிர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியதுமான பொருளாதாரமே நமக்குத் தேவை அதனையே இன்று நாம் உருவாக்கி வருகிறோம்
உள் அதிர்ச்சிகள் வெற்றிகொள்ளப்பட்டாலும், மத்திய கிழக்கில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக வெளிப்புற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 42% அதிகரித்து உலக சந்தையில் கடுமையான நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது
அத்துடன் நுகர்வோர் நடத்தையிலும் நிச்சயமற்ற தன்மை உள்ளதுடன், மார்ச் 1 ஆம் திகதி 4,500 கிலோ லிட்டர் இருந்த டீசல் விற்பனை மார்ச் 3 ஆம் திகதிக்குள் 10,500 கிலோலிட்டராக அதிகரித்துள்ளது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்
2022 ஆம் ஆண்டு டொலர் பற்றாக்குறையினாலேயே நெருக்கடி ஏற்பட்டது, இந்த முறை விநியோக பாதைகள் மூடப்பட்டதால் விநியோக நெருக்கடியே ஏற்பட்டுள்ளது நாம் தனித்தனியாக அன்றி கூட்டாக சவாலை எதிர்கொள்ள முடியும்
நெருக்கடியை வெற்றிகொள்ள அரசாங்கம் 'பொருளாதார கண்காணிப்புக் குழுவை' நிறுவியுள்ளது, விநியோகங்களைப் பேண நட்பு நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறோம்
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் மூலம் அரச பொறிமுறையை மறுசீரமைக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதுடன், வர்த்தக சமூகத்தினர் என்ற வகையில் தமது நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களை முன்னேற்றுவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்குமாறு வர்த்தக சமூகத்தினருக்கு அழைப்பு விடுகிறேன் என தெரிவித்தார்.







No comments