பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் - யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விழிப்புணர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவான "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்பதற்கு இணங்க, நாட்டை வளமான நாடாக மாற்ற முதலில் கிராமங்களை வளமாக்க வேண்டும் அதற்கு நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் வாழ்வை விரிவுபடுத்த வேண்டும்.
இதுவரை காணப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை விட இது மாறுபட்ட திட்டமாக காணப்படுகிறது. இத் திட்டத்தின் ஆரம்பமும் முடிவும் மக்களாகவே இருக்க வேண்டும். மக்களே முதன்மையாக இருப்பதால் நிகழ்ச்சித் திட்டம் உயிர்ப்புடன் இருப்பதுடன், இறுதியாக அதன் பலன்கள் மக்களையே சென்றடைய வேண்டும்.
மக்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அறிவிலும், எண்ணத்திலும், திறனிலும் காணப்படும் இடைவெளிகளை புதிய அனுபவங்களைக் கொண்டு தொழில்நுட்ப அறிவு எண்ணங்கள் மக்களின் கலை, கலாசார எண்ணத்தோடு முன்னெடுக்க வேண்டும்
குடும்ப ரீதியாக சமூக ரீதியாக, அரச தனியார் துறையில் உள்ளவர்களும் மக்களும் இணைந்ததாக இருக்கக்கூடும் அது அனைத்தையும் பொருளாதார ரீதியாக கட்டி எழுப்ப வேண்டும்
பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும். எனவே, மக்களே மக்களோடு இணைந்து வலுவூட்டல்களை அடையாளம் காணவேண்டும்
கிராம மக்களோடு கலந்துரையாடி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும். அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பொருளாதார சமூக நிலை மேம்பாடு அடைய வேண்டும்
கிராமிய மக்களின் வறுமையை அடையாளம் கண்டு எவ்வாறு அவர்களின் வாழ்வை மீட்க முடியும் எனவும் அதற்கான தீர்வு கிடைக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதுடன் மூலம் நாட்டின் வறுமை இல்லாது ஒழிப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
2025 ஆம் ஆண்டு அதிகமான டொலர்கள் வெளிநாட்டு செலாவணியாக சம்பாதித்துள்ளதாகவும், இலங்கை வரலாற்றிலேயே அதிக வெளிநாட்டு செலாவணி சம்பாதித்துள்ளதாக அவ் வருடம் காணப்படுகிறது என தெரிவித்தார்.







No comments