ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அமைச்சரவை குழு ஆராய்ந்துள்ளது.
அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு ஆராயப்பட்டது
அதில், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் அரச நிறுவனங்களின் எரிபொருள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்தைக் கண்காணிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக அரச நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சேமிக்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு குறித்து அடுத்த குழுக்கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை 2026 ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வழிகாட்டல்களின்படி செயற்படுவதற்குத் தேவையான சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களும் இணையவழி முறையைப் பின்பற்றுவது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டது.
அதனை தொடர்ந்து 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி குழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.







No comments