Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது


யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

வடமராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , போதை மாத்திரைகளை வாங்குபவர்கள் போன்று குறித்த இளைஞனுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தொலைபேசியில் உரையாடி புறாப்பொறுக்கி பகுதிக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் எடுத்து வந்த வேளை அங்கு காத்திருந்த பொலிஸார் இளைஞனை போதை மாத்திரைகளுடன் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வேளை இளைஞன் பதுக்கி வைத்திருந்த மேலும் பல போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞனிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 520 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் , அவற்றின் பெறுமதி சுமார் 4 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments