கிளிநொச்சி பகுதியில் காருடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புன்னைநீராவியடியை சேர்ந்த முதியவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு காருடன் , பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மோதியதில் , சம்பவ இடத்திலையே முதியவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காரின் சாரதியை கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments