Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். உள்ள அரச காணிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு கோரிய சிலரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை வழங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே சில காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்டகால குத்தகையில் காணி வழங்குவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்பட்டு, சில காணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதுடன், ஏனைய காணிகளுக்கான சாத்தியப்பாட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலரால் அறிவுறுத்தப்பட்டது. 

இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர்கள் (காணி மற்றும் நிர்வாகம்), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments