Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மிளகாய் தோட்டத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் கொடூரமாக படுகொலை


மட்டக்களப்பு -  களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள  வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியை சேர்ந்த காசிநாதன் ஜெயகாந்தன் (வயது 58) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தோட்டத்தில் உள்ள சிறிய கொட்டகைக்குள்  உறங்கி கொண்டிருந்த நபர் மீதே இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். 





No comments