Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கரடி பொம்மை ஊடாக ஐஸ் போதைப்பொருள் கடத்தல்; பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது


அம்பாறையில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும்   மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலத்திரனியல் தராசு 2, கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், உள்ளிட்ட சான்றுப் பொருட்கள்  சட்ட நடவடிக்கைக்காக  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments