Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அளவெட்டி அழகொல்லை விநாயகர் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம்


யாழ்ப்பாணம், அளவெட்டி அழகொல்லை விநாயகர் முன்பள்ளியின்  செயற்பட்டு மகிழ்வோம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முன்பள்ளி முன்றலில் நடைபெற்றது.

வலி வடக்கில் அதிகளவு மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு முகாமைத்துவ குழுவின் தலைவர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனும் , சிறப்பு விருந்தினர்களாக முன்பள்ளி இணைப்பாளர் உ.பிருந்தாவும், கௌரவ விருந்தினராக  கேமா அறக்கட்டளையின் நிறுவுனர் சீத்தா சிவசுப்பிரமணியம் மற்றும் முன்பள்ளியின் நலன்விரும்பியான லீ.நகுலன் ஆகியோர் கலந்து கொண்டு , பாலகர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்  

அந்நிகழ்வில் பங்குபற்றிய பாலகர்களுக்கான 66 வெற்றிக்கிண்ணங்களை கேமா அறக்கட்டளை மற்றும் கேமா வில்லா ஆகியவை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 












No comments