Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath lab machine நேற்றைய தினம் சனிக்கிழமை சேவையில் இருந்து விடை பெற்றது.

Cath Lab என்பது இதய நோய்களைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் (Angiogram, Angioplasty) சிகிச்சை அளிக்கும் உபகரண தொகுதி. இதில் x-ray உதவி உடன் இதய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள், வால்வு பிரச்சினைகள் மற்றும் Pacemaker போன்ற சிகிச்சைகள் அளிக்க படுகிறது. 

சுகாதார அமைச்சு,   இவ் உபகரணத்துக்கு பதிலாக புதிய cath lab உபகரண தொகுதியை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாத இறுதிப்பகுதியில் புதிய உபகரணம் சேவையை ஆரம்பிக்கும்.

இதே சமயம் இம்மாதம்  மேற்படி சிகிச்சைகள் வைத்தியசாலையில் இருக்கின்ற DSA இயந்திரத்திலும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருக்கின்ற Cath lab பகுதியிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

குறித்த  இயந்திரத்தை இவ்வளவு காலம் சரியான முறையில் பயன்படுத்தி வந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கதிரியக்கவியலாளர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள், இதனை வழங்கிய நிறுவன பொறியாளர் உள்ளிட்டோருடன் பணிப்பாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.







No comments