Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புத்தளத்தில் யாழ். வாசி தொலைத்த பயணபொதியை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்


புத்தளத்தில் யாழ். வாசி தொலைத்த பயண பையை , யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கண்டெடுத்து ,  உரியவரிடம் கையளித்துள்ளார் 

தனது பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா , வீதியில் பணப் பையொன்று விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து பரிசோதித்தார். 

அதன் போது, பைக்குள் இருந்த ஆவணங்களின் பிரகாரம் அது ,யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்த்தவருடையது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை பைக்குள் 30 ஆயிரம் ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து பயண பொதியை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை உரியவரிடம் ஒப்படைத்தார்.

No comments