செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், அகழ்வு பணிகளை முன்னெடுக்க ஏதுவாக புதைகுழி பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் நாளான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.









No comments