Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியாவில் வீதி விபத்து - ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழப்பு


வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் (வயத்து 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பட்டாணிச்சூர் வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த ஆசிரியரை, உடனடியாக மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.






No comments