Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் ஈஸ்டர் நினைவேந்தல் நிகழ்வுகள்


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. 

யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில் யாழ்ப்பாண ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு வழிபாடும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்களால் அஞ்சலி உரையும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments