Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாட்டை வந்தடைந்தார் இந்தியத் துணை ஜனாதிபதி - பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன


இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இந்தியத் துணை ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள அவர், அரசியல் மற்றும் சமூக ரீதியான தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தித்வா சூறாவளி தொடர்பான புனர்வாழ்வுப் பணிகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தியத் துணை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


No comments