தனியார் பல்கலைக்கழக மாணவர்களின் விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட கைக்கலப்பில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் சக மாணவர்கள் ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
களுத்துறை, மொரகஹகேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது, குறித்த ஹோட்டலில், நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) இரவு தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குறித்த ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த பல்கலைக்கழகத்தின் ஐந்து மாணவர்களை கைது செய்துள்ளனர்.









No comments