யாழில், சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீதியோர உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய விற்பனை நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் , உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அவற்றினை கடைப்பிடிக்காது தொடர்ந்து சுகாதார விதிமுறைகளை பேணாது உணவு விற்பனையில் ஈடுபட்ட வீதியோர உணவு விற்பனை நிலையங்கள் ஐந்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தம் மீதான குற்றச்சாட்டுக்களை உணவு விற்பனை நிலைய உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது









No comments