நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக யாழ்ப்பாணத்தில இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடும் மழை பொழிந்து வருகிறது.
நாளைய தினம் சனிக்கிழமையும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை , யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞன் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த நிலைமைகளை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








No comments