சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முலவை சந்தியிலிருந்து ஆரம்பமான மே தின பேரணி வைத்தியசாலை வீதியூடாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்து , அங்கு கூட்டம் நடைபெற்றது .
இந்த மேதின பேரணியில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ச.ஸ்ரீபவானந்தராசா மற்றும் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, உள்ளூராட்சி சபைகளின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் , கட்சியின் ஆதரவாளர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொண்டு விசேட உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.









.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



No comments