Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரண்டு நாட்கள் மூடப்படும் புத்தூர் - சுன்னாகம் வீதி


யாழ்ப்பாணம் , சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K  சதுரெனோ அறிவித்துள்ளார். 

சுன்னாகம் - புத்தூர் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவை மார்க்கத்தை அவசரமாக திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதால், மேற்படி கடவை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை மூடப்படும் 

அதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது. 

மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


No comments