Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.பொலிஸ் விசாரணைக்கு சென்றவர் பொலிஸ் நிலையத்தினுள் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். 

விசாரணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments