கொழும்பு சீதுவை பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் காணப்பட்ட சூட்கேசில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு விரைந்த பொலிஸார் , வீட்டில் தேடுதல் நடாத்திய வேளை படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சூட்கேஸ் காணப்பட்டுள்ளது
சூட்கேஸை திறந்த போது, குறித்த வீட்டில் வசித்து வந்த 79 வயதுடைய மூதாட்டி சடலமாக காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டு இருந்ததுடன் , தொலைபேசி வயர்கள் அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









No comments