யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ் கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பார ஊர்திகள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்பட்டன.
கொண்டு வரப்பட்ட அனைத்து மருந்துகளும் புதிதாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருந்துக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. நாளை திங்கட்கிழமை முதல் சகல சேவைகளும் வழமைபோன்று நடைபெறும்.
மேலும் ஒரு தொகுதி மருந்துகளும் எதிர்வரும் நாட்களில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வழங்குவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்









No comments