தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை தொலைத்தமை தொடர்பாக, யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் வெளியில் சென்ற போது, பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளார் , எனினும் மீண்டும் அவற்றை அவர் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு ஓ.ஐ.சி ஆகக் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்









No comments