Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்


யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் “பெண்கள் சந்திப்பு” நிகழ்வுகளில் கலந்து கொண்டார். 

அதன் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

முன்னதாக பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து மதியம் மல்லாகம் கல்லாரை வளர்மதி சனசமூக நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து மாலை எழுதுமட்டுவாழ் மருதங்குளம் விநாயகர் முன்பள்ளிக்கு அருகாமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார். 

குறித்த கலந்துரையாடல்களில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ச. சிறிபவானந்தராசா , க. இளங்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார் 






No comments