Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

06 மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது - 30 பேர் உயிரிழப்பு


இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா தெரிவித்துள்ளார். 

இதுவரை 50,459 டெங்கு நோயாளிகளும், 30 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டிய வைத்தியர், நுளம்புகளின் அடர்த்தியில் எந்தக் குறைவும் இல்லை என்றும், எனவே நமது சுற்றுப்புறத்தை தவறாமல் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம் என்றும் கூறினார். 

நீண்ட வார இறுதி நாட்களில் பொதுமக்களின் செயல்பாடுகளால் டெங்கு நோய் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டிய வைத்தியர், மக்கள் இந்த வார இறுதி நாட்களைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார். 

இது நமது நாடு, நமது நாட்டைத் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு முக்கியம், அது இந்த நோயைக் குறைக்க உதவும். எனவே, தயவுசெய்து இதில் கவனமாக இருங்கள். ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அவருக்கு டெங்கு இருக்கிறதா இல்லையா என்பதை அறிய அவர் ஒரு தகுதிவாய்ந்த வைத்தியரை அணுக வேண்டும். அதைக் கண்டறிய உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். டெங்கு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும் வரை, பெரசிட்டமோல் வகை மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சலைக் குறைக்க, நீங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். என்றார்.

No comments