வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை ஊர்வலம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது.
கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் உள்ள மடத்திலும் வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து கீரிமலை மாவிட்டபுரம் வீதி வழியாக மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் நோக்கி கொடிச்சீலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி அன்று காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 தினங்கள் மகோற்சவம் நடைபெறவுள்ளது.





.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



No comments