Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டமை உறுதி


யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலே கொலையானார் எனவும், குற்ற செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது எனும் முடிவுக்கு மன்று வந்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரான வைத்தியர் தயாளினி திலீபன் (வயது 54) கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி படுகொலையானார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை கைது செய்து விசாரணைகளின் பின் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் யாழ். நீதாவன் நீதிமன்றில் நடைபெற்று வந்த மரண விசாரணைகளில், சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை, பொலிஸாரின் விசாரணை அறிக்கை , சாட்சியங்கள் மற்றும் ஆதரங்களின் அடிப்படையில் குற்ற செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதுடன் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்  எனும் முடிவுக்கு மன்று வந்துள்ளது.

அதன் அடிப்படையில் விசாரணைகளை மன்று தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள நிலையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

No comments