Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நேற்று 563 பேர் கைது


நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் 27,675 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில், குற்றச்செயல்களுடன் நேரடி தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 303 பேரும், திறந்த பிடியாணைகளின் கீழ் 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 73 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 123 பேரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறியதாக அடையாளம் காணப்பட்ட 4,152 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments