Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி - 5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்


'பனை வளம் நிலையான வாழ்வின் பலம்' எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன இணைந்து நடாத்திய பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் கடந்த  'தால வாரம் - 2026' என்ற பெயரில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்று வருகிறது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான கண்காட்சி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இந்தக் கண்காட்சியின் விற்பனையூடாக 2.4 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்  அகல்யா செகராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளதுடன், குறிப்பாக வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வருகை தந்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் நிகழ்வான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார். 

No comments