லங்கா பிறீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது அத்தியாயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பமாகவிருந்த நிலையில்,போட்டி ஒத்திவைப்பு மற்றும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடிக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் முக்கிய உரிமையாளர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை LPL தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த காலங்களிலும் LPL தொடரில் இவ்வாறான முறைகேட்டுச் சம்பவங்கள் தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments