Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை


யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடம் ,  மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி , பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரி கட்டத்தை பார்வையிட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்டேன். பழைய கச்சேரி கட்டடம் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய சொத்து.

அதனை மிகவும் விரைவாகப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளோம்.

அதேபோன்று யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் என இவை அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 










No comments