நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் விமல் ரட்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைக்கவுள்ளனர்.
கடல் கடந்த தீவான நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில் , அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடல் தாண்டி வேலணை பகுதிக்கு வந்தே கொள்கலன்களில் எரிபொருட்களை நிரப்பி செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது. இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்ததுடன் , சில வியாபாரிகள் , எரிபொருட்களை வேலணையில் கொள்வனவு செய்து , நெடுந்தீவுக்கு எடுத்து சென்று அதிக விலைக்கும் விற்று வந்தனர்.
அதேவேளை , எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்க தடை செய்யப்பட்டமையால் , பல சிரமங்களை நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நெடுந்தீவுக்கு என புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





.jpg)



No comments