Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சர்


யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர்  கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றார்.

No comments