'தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் - 2026' நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், 'தமிழ் மொழிக்கு இலங்கையர்கள் ஆற்றிய பங்களிப்பு' என்ற விசேட நூல் வடக்கு மாகாண ஆளுநரால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
முன்னதாக, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமான பிரம்மாண்டமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம், காங்கேசன்துறை வீதி மற்றும் வைத்தியசாலை வீதி ஊடாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் சுவாமி விபுலானந்தர், இயல், இசை மற்றும் நாடக உருவகங்களைக் கொண்ட சிறப்பு ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன. அத்துடன், புரவி நடனம், பொய்க்கால் குதிரை, வசந்தன் கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி, கரகாட்டம் உள்ளிட்ட பல பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஊர்வலத்துக்குச் சிறப்பூட்டின.
அரசகரும மொழிகள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன

















No comments