செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 34ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 34ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 06 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் ஒரு சிசுவினுடையதும் 03 சிறுவர்களுடையதுமாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சான்று பொருளாக பாசிமணி ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 88 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 420 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 416 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.









No comments