யாழ் மாநகர சபைக்குட்பட்ட நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வேலைத்திட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிராமப்புற மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 1,000 மில்லியன் ரூபாய் முதலீட்டில் 800 கிராமப் பாலங்கள் அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்று நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக 100 கிராமப் பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நல்லூர் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள பாலம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.












No comments