Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அருச்சுனா எம்.பிக்கு ஆதரவாக ரஜீவன் எம்.பி


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாகக் கூறினார். அவ்வாறான கேள்விகளை கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அதைத் தடுப்பது ஜனநாயகத்துக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் இருந்து அருச்சுனாவை வெளியேறுமாறு கூறுவதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், அருச்சுனா எழுப்பும் கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் அல்லது விசாரணைக் குழு நியமிக்கப்படும் என உறுதியளித்தால், அதனை மக்கள் பிரதிநிதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர், கூட்டத்தை ஒழுங்காக கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் தலைமைத்துவம் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் எனக் கூறிக்கொண்டு சிலர் நுழைந்ததாகவும், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த காலங்களிலும் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறும்போது அவரது ஆதரவாளர்களும் வெளியேறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இது தவறான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்களது நேரத்தையும் வளங்களையும் ஒதுக்கி கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டம் இடைநிறுத்தப்பட்டமை பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார். சிறீதரனோ அல்லது அருச்சுனாவோ வெளியேறியிருந்தாலும், கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் கூட்டங்களை குழப்பும் நடைமுறைக்கு அது வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.

அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அவை குற்றப்புலனாய்வு திணைக்களம், பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் முன்னர் பொது இடங்களில் யாரையும் குற்றவாளி எனக் குற்றம்சாட்டுவது தவறானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments