Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீட்டிற்குள் புகுந்த பேருந்து


மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில், வீடு ஒன்று கடுமையாக சேதமடைந்ததுடன்,பேருந்து  சாரதி காயங்களுக்குள்ளானார்.

கதிர்காமத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தனியார்பேருந்து, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்போ அல்லது வேறு எவருக்கும் காயமோ ஏற்படவில்லை.

எனினும், காயமடைந்த பஸ் சாரதி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments