Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வட மாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 33 மாணவர்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.







இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

No comments