யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரின் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகளை கலந்துரையாடுவதற்கே இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கலந்துரையாடலில் முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் ஒஸ்மானியா கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி, உட்கட்டுமான தேவைப்பாடுகள், வாழ்வாதாரம், வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், மாவட்ட செயலர் ம.பிரதீபன் , மேலதிக செயலர் கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.









No comments