Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் விடுதி திறப்பு


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரண படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் (bridge to humunity ) எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியை  இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்மேத்யூ டக்வொர்த் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா,  அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர். 

இறப்பிற்கு முன் தமது இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக மருத்துவர்களின் பரிந்துரையுடன் கூடிய இந்த விடுதியில், யாழ்.மாவட்டத்தில் எந்த பகுதியில் உள்ளவர்களும் இவ்வசதியை பயன்படுத்தமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
















No comments