Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அல்லைப்பிட்டியில் புற்தரைக்கு தீ வைத்தவர் கைது


யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்  இடைப்பட்ட பகுதியில் உள்ள புற்றரைக்கு தீவைத்த நபர் ஒருவரை ஊரவர்கள் பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம்.ஒப்படைத்துள்ளனர் 

வயல்வெளிகள் மற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதால் பல்வேறு அசௌகரியங்கள் உருவாகி இருந்தன. 

இதனால், பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாவதுடன், புகை மற்றும் தீ பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்த போது பிடிக்கப்பட்டு, ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments